பிரபல கோவிலில் காதல் திருமணத்திற்கு தடை! ஏன் தெரியுமா?

தெலங்கானா மாநிலத்தில் உள்ள தாபல்லா லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவிலில் காதல் திருமணங்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் காதல் திருமணங்கள் மிகவும் பிரபலமானவை. அண்டை மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வரும் தம்பதிகள் இங்கு வந்து திருமணம் செய்து கொள்வார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் மஹன்களி அணில் என்பவரும், ஹஸ்தாபுரத்தைச் சேர்ந்த மௌனிகா(18) இளம்பெண்ணும் தங்களது பெற்றோர் விருப்பதற்கு மாறாக இந்தக் கோவிலில் காதல் திருமணம் செய்துக் கொண்டனர்.

இதனையடுத்து தகவலறிந்து கோவிலுக்கு வந்த மௌனிகாவின் உறவினர்கள் அணிலின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து காதல் திருமணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தாபல்லா லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் நிர்வாக பொறுப்பாளர் வெங்கட் ரெட்டி கூறியுள்ளார்.