நம் உதட்டின் இயற்கையான உதட்டு நிறத்தை பெறுவது எப்படி?

உதட்டுச்சாயங்கள் மற்றும் லிப் க்ளாஸ்கள் கொண்டு உதடுகளுக்கு வண்ணம் பூசி அழகு படுத்துவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் அதை தவிர சில இயற்கையான வழி முறைகளும் உள்ளன. அவைகள்,

– இயற்கை முறையில் பீட்ரூட் கொண்டு உதட்டை அழகுபடுத்தலாம், ஒரு பீட்ரூட் எடுத்து அதனை 30 நிமிடம் வரை வறுத்து கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து சூடு ஆறிய பின் இரண்டாக வெட்டி உட்புறம் உள்ள சிவப்பு பகுதியை உங்கள் உதட்டின் மேல் தேய்க்கவும். இதே முறையை பயன்படுத்தி உங்கள் கன்னங்களையும் அழகு படுத்தலாம்.

– செயற்கை பொருட்களை பயன்படுத்துவதை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தலாம். அதாவது சீமை களாக்காய்/குருதிநெல்லி (இந்த இரண்டும் ஒன்றே) சாறை பயன்படுத்ததுவதன் மூலமும் இயற்கையான நிறத்தை பெறலாம். இது உங்கள் உதட்டிற்கு அழகான சிவப்பு நிறத்தை தருவதோடு உங்கள் உதட்டையும் பாதுக்காக்கிறது.

– பெட்ரோலியம் ஜெல்லியுடன் செர்ரி சாற்றை (வாஸலின் போல) கலந்து
உதட்டிற்குஉபயோகப்படுத்தலாம். இதை உங்கள் உதட்டின் மேல் உபயோகபடுத்தி உதடுகளை அழகாகக்குவதோடு, இது உங்கள் உதடுகளை மென்மையாகவும் மற்றும் மிருதுவாகவும் வைக்கும்.
-கேக்குகள் செய்ய பயன்படுத்தப்படும் வண்ணத்ங்களையும் கொண்டு உங்கள் உதட்டிற்கு பயன் படுத்தலாம். அதில் சிறிதளவு எடுத்து உதடு முழுவதும் ஒரே மாதிரி தடவலாம்.