ஹோட்டல் திட்டம் இடைநிறுத்தம்!

சிவனொளிபாத மலையை அண்மித்த பகுகதியில் அமைக்கப்படவிருந்தாக தெரிவிக்கப்பட்ட ஹோட்டல் திட்டத்தை இடை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தீர்மானத்திற்கமைய இந்த நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஹோட்டல் திட்டம் அமைக்கப்படுமாகவிருந்தால் பாரிய சுற்றாடல் பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அது தொடர்பாக ஆராய்ந்த சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த திட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

குறித்த மலைப் பகுதியில் மறே என்ற பகுதியில் அந்த ஹோட்டலை அமைப்பது தொடர்பாக அண்மையில் ஹெலிக்கப்டரில் அந்தப் பகுதிக்கு சென்ற திட்டங்களுடன் தொடர்புடைய குழுக்கள் அங்கு நிலத்தை பார்வையிட்டனர்.

அது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.