அண்மையில் பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் பிரித்தானியாவாழ் தமிழ் மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
அந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட முதலமைச்சர் சிறப்புரை ஆற்றியதோடு அங்கு கலந்துகொண்ட மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.
அதில் கலந்துகொண்ட ஒருவர் கேட்டகேள்வி உங்களுடைய அரசியல்வாழ்வு இந்த பதவிக்காலத்துடன் முடித்துக்கொள்வீர்களா அல்லது தந்தை சொன்னதுபோல தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று சொல்லி ஒதுங்கிவிடுவீர்களா என்று அதற்கு பதிலளித்த முதலமைச்சர் இந்த முதலமைச்சர் பதவிக்குகூட நான் தெய்வாதீனமாக அதாவது ஆண்டவன் செயலால் வந்திருக்கின்றேன்.
என்னால் ஒரு முடிவும் எடுக்க முடியாது ஆண்டவனுக்கு தெரியும் என்னசெய்ய வேண்டும் என்று அது நான் சொன்னால் என்ன தந்தை செல்வா சொன்னால் என்ன அடுத்த தேர்தலில் நான் வருவேனா இல்லையா என்பதை ஆண்டவனே முடிவெடுப்பான் என சாதுரியமாக பதிலளித்தார் முதலமைச்சர்.
முதலமைச்சர் அரசியலிலிருந்து ஒதுங்குவதற்கு தீர்மானித்தாலும் அதற்குரிய காலம் இன்னும் தோன்றவில்லை என்பதோடு உரிமைகளை விலைபேசும் தலைமைகள் இருக்கும்வரை விக்கினேஸ்வரனின் தேவை என்பது தமிழர்கள் மத்தியில் அதிகமிருப்பதாகவே உணரப்படுகின்றது.