வடகொரிய அதிபர் மனைவி மாயம்!

வடகொரிய அதிபர் மனைவி 7 மாதங்களாக மாயமானார்.

வடகொரிய அதிபராக கிம் ஜாங்-யங் இருந்து வருகிறார். 28 வயதான இவர் சர்வாதிகாரி ஆக திகழ்கிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ரீ கோல்-ஜீ என்ற பெண்ணை தனது மனைவி என அறிவித்தார்.

அவ்வப்போது அவர் வெளி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இறுதியாக கடந்த மார்ச் 28-ந் தேதி தலைநகர் பியாங்யாங்கில் நடந்த ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் தோன்றினார்.

அதன் பின்னர் கடந்த 7 மாதங்களாக அவர் வெளியில் வரவில்லை. திடீரென மாயமாகி விட்டார். இதனால் வடகொரியா மற்றும் தென் கொரியா பகுதிகளில் பல விதமான யூகங்களுடன் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அவர் கர்ப்பமாக இருக்கலாம். அதனால் வெளியே வராமல் ஓய்வு எடுத்து வரலாம் என்று ஒரு பிரிவினர் தெரிவிக்கின்றனர். அதிகார போட்டி காரணமாக கிம் ஜாங்-யங் தனது இளைய தங்கையை சமீபத்தில் நாட்டை விட்டு வெளியேற்றினார். அவருடன் அவரது மனைவி ரி கோல்-ஜிவும் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.