ரவி கருணாநாயக்கவின் வரவேற்புடன் கொழும்பில் அதிசொகுசு கப்பல்

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கப்பல் ரவி கருணாநாயக்கவின் வரவேற்புடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலானது நேற்று(31) கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளது.

அரசாங்கப் பிரதிநிதிகளும் இக்கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிங்கப்பூருக்கு சொந்தமான இந்த சொகுசு கப்பலில் பயணிகள் சவாரி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் 3000 இற்கும் அதிகமான பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்ககூடியதாயிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.