ஷரியா சட்டம் குறித்து விசாரணை : பல முஸ்லிம் பெண்கள் அதிருப்தி

முஸ்லிம்கள் பின்பற்றும் ஷரியா சட்டம் தொடர்பில் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள், குறித்த சட்டத்திற்கு தடை விதிப்பதற்கே தவிர அதில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு அல்ல என, சுமார் 100 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் குற்றச்சாட்டு ஒன்றை  முன்வைத்துள்ளனர்.

ஷரியா சட்டம் தொடர்பில் பிரித்தானியாவில் இரு வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தெரேசா மே, உட்துறை செயலாளராக இருந்த காலத்தில், குறித்த ஷரியா சட்டம் தொடர்பில் விசாரணைகள் மேற்ககொள்ளப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அத்துடன், உள்நாட்டு அலுவல்கள் தெரிவுக் குழுவினாலும் குறித்த சட்டம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இங்கிலாந்து முஸ்லிம் பெண்கள் வலைப்பின்னல் குழுவின் தலைவி ஷைட்ஸா கோஹிர் (Shaista Gohir) இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, “இந்த விசாரணைகள் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவு கிடைக்கலாம்” என தெரிவித்துள்ளார்.