மனைவியின் மேல் உயிரையே வைத்திருந்த கணவன்… உயிரை எடுத்தான் கள்ளக் காதலன்…! செக்ஸ் மோகம்..!

இந்திய மாநிலமான தமிழகத்தில் மதுரை திருபுவனம் பகுதியில் அரசு பஸ் கண்டக்டர் முருகேசன் மனைவி தனலட்சுமி(33). எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் ஏஜென்ட். முருகேசன் தனது மனைவி மீது உயிரையே வைத்திருந்தார். என்ன கேட்டாலும் கடன் வாங்கியாவது அதை வாங்கிக் கொடுத்து விடுவார்.

மனைவி பிறந்தநாள் வரும்போதெல்லாம் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து மொட்டை போட்டுக் கொள்வார்..! தினமும் எவ்வளவு நேரம் ஆனாலும் மனைவிக்கு பிடித்த பரோட்டா தலைக்கறி வாங்கி வந்து கொடுப்பார்.ஆனால் மனைவிக்கு செக்ஸ் மோகம் அதிகம்.

இந்த நிலையில் காந்திகிராமம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் அய்யலூர் தீத்தாகிழவனூர் பாலத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 7 பவுன் நகை காணவில்லை. வாகனத்தில் கொண்டு வந்த பிணத்தை உருட்டிவிட்டதற்கான அடையாளம் சம்பவ இடத்தில் இருந்தது.

பொலிசார் விசாரணையில், நான்கு மாதங்களுக்கு முன் தனலட்சுமியின் தவறுதலான “மிஸ்டு கால்’ மூலம் அறிமுகமானவர் திண்டுக்கல் மாலைப்பட்டி ரோட்டைச் சேர்ந்த குமரேசன்(26). இருவருக்கும் காதல் அரும்பியது..!அடிகடி காட்டுப் பகுதிக்கு சென்று உல்லாசம் அனுபவித்தனர்.

இவரது தந்தை மாரியப்பன் திண்டுக்கல் தாட்கோ அலுவலக உதவியாளர். 9ம் வகுப்பு வரை படித்த குமரேசன், தனது தந்தை வேலை செய்யும் அலுவலகம் அருகில் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

தனலட்சுமியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பினால், அவரது மனைவி பாத்திமா, இரண்டு குழந்தைகளும் குமரேசனிடம் கோபித்து கொண்டு சென்று விட்டனர். சம்பவத்தன்று குமரேசனுடன் தனலட்சுமி காரில் சுற்றி வரும் போது, தனலட்சுமி மொபைலுக்கு வேறொரு ஆண் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதனால் கோபமடைந்த குமரேசன், தனலட்சுமியின் மொபைலை பறிக்க முயற்சிக்க, அவர் தரமறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமரேசன் தனலட்சுமியை காரினுள் வைத்து கொலை செய்து, அவரது நகைகளை எடுத்து கொண்டு அய்யலூர் பாலத்தில் பிணத்தை தள்ளிவிட்டு சென்றது தெரிந்தது.