மீண்டும் அதிகரிக்கப்பட்ட சிகரட் விலைகள்!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 5 ரூபா முதல் 10 ரூபா வரை விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

42 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சிகரட் வகைகள் 5 ரூபாவினாலும் 42 ரூபாவுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட சிகரட் வகைகள் 10 ரூபாவினாலும் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே அண்மையில் வரி அதிகரிப்பால் 7 ரூபாவினால் சிகரட் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்று முதல் அமுலுக்கு வந்த 15 வீத வற் வரி அதிகரிப்பால் அதன் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது