ஈழத்தமிழர்களை அழிக்க இனவாதத்தை கிளப்ப முயலும் மகிந்த -ஆதாரம் பிடிபட்டது

ஆட்சிக்கு எதிரான அல்லது இனவாதத்தை தூண்டிவிடும் செய்திகள் அதி வேகமாக தென்னிலங்கையில் பரப்பப்பட்டு வருகின்றது. அதற்கான செயற்பாடுகள் அன்றாடம் இடம் பெற்றுகொண்டே இருக்கின்றது.

ஆவா குழு என்பது விடுதலைப்புலிகளின் தலைமையில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது பின்னர் புதிதாக பிரபாகரன் படை என ஒன்று உருவாக்கப்பட்டது இவை அனைத்துமே நாட்டில் பதற்ற நிலையை ஏற்படுத்த முயலும் சதியாளர்களினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

வடக்கில் இராணுவ அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்பட்டு பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்ற வேளையில் அதனைத் தொடர்ந்து, மலேசியாவில் சிங்கள இளைஞர்கள் மீது வாள்வெட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறி இரத்த வெள்ளத்தில் இளைஞர்கள் கிடக்கும் புகைப்படங்கள் சிலவற்றினையும் மஹிந்த ஆரதவாளர்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த செயல் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இளைஞர்களை தூண்டிவிடும் செயலாகவே காணப்படுகின்றது. இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை எதுவும் தெரியாத நிலையில் பொய்யான தகவல்களை பரப்பும் போது அது இனவாதத்தினை உண்டுபண்ணும் செயலாகவே நோக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான பொய்களை பரப்பி நாட்டில் குழப்பத்தில் ஏற்படுத்த முயலும் செயலில் மஹிந்த தரப்பின் ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பதிவினையும் மஹிந்த ஆதரவான ஒருவரே பரப்பிவருகின்றார்.

உண்மைகள் அற்ற அதே நேரம் உண்மைத்தன்மை அறியப்படாத போது சிங்களவர்கள் மீது தாக்குதல் என்ற கருத்து கூறப்படும் போது அது எந்தவகையிலும் வரவேற்கத்தக்கதல்ல. அதன் விளைவு பாரதூரமானதாக அமையும்.

ஏற்கனவே மலேசியாவில் விடுதலைப்புலிகள் இருப்பதாக கருத்துகள் கூறப்பட்டு வரும் வேளையில் இவ்வாறானதொரு தகவலை பரப்புவதன் மூலம் நாட்டில் இனவாதம் தூண்டப்படுவதோடு தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் ஒன்று திரளக் கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

இனவாதக் கருத்துகளை பரப்புகின்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆரம்பத்திலேயே இவை தடுக்கப்படாவிட்டால் சிங்கள மக்கள் தமிழர்கள் எதிராக திசைதிரும்பிவிடுவதோடு, கலவரம் ஏற்படும் அபாயமும் உண்டு எனவும் தென்னிலங்கை அவதானிகள் கூறிவருகின்றனர்.

நல்லிணக்க நாடு என்ற வகையில் இவ்வாறான செயற்பாடுகள் ஆரம்பத்திலேயே தடுக்கப்படாவிட்டால் மீண்டும் இலங்கையில் பாரியளவு உயிர்ச்சேதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகின்றது.