50103 கோடி ரூபா குறைநிரப்பு பிரேரணை முன்வைப்பு!

மேலதிக நிதி ஒதுக்கீட்டுக்கான பிரேரணையொன்று அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் என்பவற்றுக்கு நடப்பு வருடத்துக்காக முன்வைக்கப்பட்ட (2016) கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி போதாது எனத் தெரிவித்தே இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வேண்டப்பட்டுள்ள குறைநிரப்பு தொகையின் அளவு, 5 ஆயிரத்து நுாற்றி மூன்று கோடி ரூபாவை விடவும் அதிகமானது என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடு இடம்பெற்று, வருடம் முடிவடைய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் இவ்வாறு அமைச்சுக்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு கேட்டு பாராளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

அமைச்சுக்களுக்கு வாகனங்கள் கொள்வனவு மற்றுமுண்டான தேவைகளுக்கே இவ்வாறு மேலதிக நிதி ஒதுக்கீட்டுக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.