விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் நம்பர் ஒன் நடிகை.

நடிகர் விஜய்சேதுபதியுடன் ஹன்சிகா, நயன்தாரா உள்பட முன்னணி நடிகைகள் நடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு முன்னணி நடிகையான சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆம், ‘ஆரண்யகாண்டம்’ படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் பகத் பாசில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.