இலங்கைக்கு 10 ஹெலிகாப்டர்களும் 2 விமானங்களும் கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நன்கொடைகளாக இவை கிடைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலிருந்து 2 C130 விமானங்கள் நன்கொடையாகப் பெறப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.
நன்கொடை
அமெரிக்காவிலிருந்து TH-57 ரக 10 ஹெலிகாப்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.







