பிரபல உணவகங்களில் சுகாதார சீர்கேடு ; அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை

வவுனியா – ஹொரவப்பொத்தான வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு பிரபல சைவ உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் தற்காலிகமாக மூடப்பட்டது.

குறித்த இரு உணவங்களும் சுகாதார பரிசோதகர்களால், இன்றையதினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இரு உணவகங்களையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.