விளக்கமறியலில் மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் இன்று கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்பதாக, சட்டவிரோத சொத்துக்களைப் பெற்றமை தொடர்பான சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கடந்த வருடம் டிசம்பர் மாதம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.