QR குறியீட்டு முறை மூலம் சிறு மற்றும் நடுத்தரத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பமாகிறது.
இதன்படி, பயனாளிகள் QR குறியீட்டைத் தயாரித்து தேசிய உரச் செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட உர நிறுவனங்களிடமிருந்து உரத்தைப் பெறமுடியுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்கீழ் இன்று முதல், 50 கிலோ உரப்பொதி 4,000 ரூபாய் மற்றும் 25 கிலோ உரப்பொதி 2,000 ரூபாய் மானிய விலையில் விநியோகிக்கப்படவுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்த உர மானியத்தை தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக 2,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.







