நாவிற்கு இதமான நாட்டுக்கோழி ரசம்

தற்போது மக்களுக்கு வரும் தொற்று காய்ச்சல் சளி இருமல் போன்ற நோய்களுக்கு ரசம் குடிப்பது வழக்கம். இது பருவகால மாற்றதால் தான் இடம்பெறும்.

நோய் எதிர்ப்பு சக்தி உடலில் பலவினமாக இருக்கும் போது சத்தாக ரசம் வைத்து குடிக்க வணெ்டும் என்ற ஆசை இருந்தால் இந்த நாட்டுக்கோழி சூப் செய்து பாருங்கள்.

இந்த ரசத்தை நாங்கள் சொல்லும் பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டு பாருங்கள். மறுநாளே சளி, இருமல் பறந்து போகும். உடலுக்கு சத்து கிடைக்கும்.

தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி – 5 துண்டு
எண்ணெய் – 2 Tbsp
தக்காளி – 2
கடுகு – 1 tsp
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1 tsp
காய்ந்த மிளகாய் – 3
மிளகு – 1 Tbsp
சீரகம் – 1 Tbsp
பூண்டு – 5 பல்
சின்ன வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை
முதலில் நாடுக்கோழிகளை உரலில் நன்கு இடித்து எடுத்துகொள்ளவும். அடுத்து பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பின் கடுகு கைவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

பின் சின்ன வெங்காயத்தை இடித்து அதில் போடுங்கள். அதனுடன் மிளகு , சீரகம், பச்சை மிளகாய் , பூண்டு, தக்காளி ஆகியவற்றையும் இடித்து அதையும் அந்த பாத்திரத்தில் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.

பின்னர் இடித்த சிக்கனை சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து அதோடு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்துவிடுங்கள்.

இறுதியாக போதுமான உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான சூடான சிக்கன் ரசம் தயார். இதை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள்.