ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி இன்று மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளது.
இலங்கை அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்த நிலையில், மீண்டும் நாடு திரும்பியுள்ளது.
குறித்த தொடரில் இலங்கை அணி 6 போட்டிகளில் மோதியிருந்த நிலையில், 3 போட்டிகளில் வெற்றிகளையும் 3 போட்டிகளில் தோல்விகளையும் சந்தித்திருந்தது.







