நடிகை சமந்தா தற்போது இயக்குநர் ராஜ் நிடிமுருவை காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. பல போராட்டங்களை கடந்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.
தி பேமிலி மேன், சிட்டாடல் என தன்னை விட இரு வெப் தொடர்களை இயக்கிய இயக்குநர் ராஜ் நிடிமுருவுடன் சமந்தா நெருங்கி பழகி வருவதாக கூறப்படுகிறது. இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.
மேலும் ஜிம், ஷாப்பிங், கோவில் என பல இடங்களில் இருவரும் கைகோர்த்து சுற்றி வருகிறார்கள். ஆனால், தங்களது காதல் குறித்து இருவரும் உறுதிப்படுத்தவில்லை.
இயக்குநர் ராஜ் நிடிமுருவின் முன்னாள் மனைவியும், பிரபல எழுத்தாளருமான சியாமளி தி, தனது சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இவர்கள் குறித்து சூசகமாக தெரிவித்து வரும் கண்டனங்களும் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.







