தமிழ் சினிமாவின் டாப் 5 பணக்கார நடிகைகள்

சினிமா நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு விவரங்கள் குறித்து அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள டாப் 5 பணக்கார நடிகைகள் யார்யார் என்பது குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

5. ராஷ்மிகா மந்தனா
கன்னட திரையுலகில் அறிமுகமாகி இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்கள் இவரை நேஷனல் க்ரஷ் என அழைக்கிறார்கள். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 66 கோடி.

4. த்ரிஷா

20 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் த்ரிஷா. இவருடைய சொத்து மதிப்பு ரூ. 85 கோடி என கூறப்படுகிறது.
3. சமந்தா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தற்போது பாலிவுட்டில் கலக்கிக்கொண்டிருக்கிறார். படங்களை தாண்டி வெப் தொடர்களில் அதிகம் கவனம் செலுத்துகிறார். மேலும் இந்த ஆண்டு தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிவிட்டார். சினிமா மட்டுமின்றி தொழிலதிபராகவும் இருக்கிறார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 95 கோடி முதல் ரூ. 110 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

2. தமன்னா

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருப்பவர் தமன்னா. இவர் தமிழ் சினிமாவில் 2006ஆம் ஆண்டு அறிமுகமாகி இன்று வரை முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது ஹிந்தியில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில், இவருடைய சொத்து மதிப்பு ரூ. 120 கோடி இருக்கும் என்கின்றனர்.

1. நயன்தாரா

20 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் நயன்தாரா தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 200 கோடி என கூறப்படுகிறது.

பின் குறிப்பு: டாப் 5 பணக்கார நடிகைகள் குறித்து வெளிவந்துள்ள இந்த தகவல் சினிஉலகத்தின் சொந்த கருத்து அல்ல. மேலும் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.