பிரபல யூடியூபரான டிடிஎப் வாசனுக்கு அவரது மாமன் மகளுடன் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் முறையாக மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதுவரையில், மணப்பெண்ணின் முகத்தை மறைத்தப்படி காணொளிகளை வெளியிட்டு வந்த டிடிஎப் வாசன் தாலி கட்டி தன்னுடைய மனைவியாக்கிய பின்னரே பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர்களைப்போல யூடியூப் வாசிகளும் பிரபலங்களாக வலம் வருவது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாகி வருகிறது. அப்படி பிரபலமான யூடியூப் செலிப்ரிட்டிகளுள் ஒருவர், டிடிஎஃப் வாசன்.
பிரபல யூடியூபராக வலம் வரும் டிடிஎஃப் வாசன், அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி போலீசாரால் அடிக்கடி கைது செய்யப்படுவது வழக்கம்.
அதிவேகமாக பைக் ஓட்டுவது, பைக் ஓட்டிக்கொண்டே சாகசம் செய்வது என சேட்டைகளை செய்வதில் கெட்டிக்காரான இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இளைஞர் சமூகத்தை கெடுக்கும் வகையில் காணொளிகளை வெளியிடுவதால், இவருடைய யூடியூப் சேனலையே பிளாக் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கண்டித்தது. அதன் பின்னரும் கூட வாசன் காரில் போன் பேசியபடியே வேகமாகச் சென்று மற்றொரு வழக்கில் சிக்கினார்.
அவரை யூடியூபில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் , குக் வித் கோமாளி புகழ் சாலின் ஸோயாவை காதலிப்பதாக பல்வேறு புகைப்படங்களும் செய்திகளும் இணையத்தில் வைரலாது.
அதனை தொடர்ந்து டிடிஎப் வாசன் ஹீரோவாக அறிமுகமாகவிருந்த மஞ்சள் வீரன் திரைப்படத்தில் இருந்து இவர் சில தனிப்பட்ட காரணங்களுக்காக நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
பல்வேறு சர்சைகளில் சிக்கி கைதாகியே பிரபலமான டிடிஎப் வாசன் தற்போது இதுவரையில் யாரும் செய்யாத வகையில், வீட்டை விட்டு ஓடிபோய் திருமணம் செய்வதையே கன்டென்டாக மாற்றி மீண்டும் ட்ரெண்டாகியுள்ளார்.
இந்நிலையில் டிடிஎப் வாசன் தனது மனைவியின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளமையால் குறித்த விடயம் இணையத்தில் படு வைராலாகி வருகின்றது.மேலும் இவரின் திருமணத்துக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
View this post on Instagram







