பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரித்துள்ளது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
“இன்று, பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் அமைதிக்கான நம்பிக்கையையும், “இரு நாடு” தீர்வுக்கான நம்பிக்கையையும் புதுப்பிக்க, பிரித்தானியா பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.
இதனிடையே, கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
இன்று (21) முதல் கனடா பாலஸ்தீன அரசை அங்கீகரித்து, பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டுக்கும் அமைதியான எதிர்காலத்திற்கான வாக்குறுதியைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்மைய, பாலஸ்தீன அரசை அங்கீகரித்த முதல் ஜீ7 நாடாக கனடாவும், இரண்டாவது நாடாக பிரித்தானியாவும் மாறியுள்ளன.
அதேநேரம், பாலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்கும் கனடாவின் முடிவை அவுஸ்திரேலியாவும் பின்பற்றுகிறது என பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குறிப்பிட்டுள்ளார்







