அத்து மீறும் ரஷ்ய போர் விமானங்கள்!

ரஷ்ய போர் விமானங்கள் தங்கள் வான்வெளியை மீறியதை அடுத்து, எஸ்டோனியா, ஏனைய நேட்டோ உறுப்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளது.

எஸ்டோனியாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த ஊடுருவலை “வெட்கக்கேடானது” என்று கண்டித்துள்ளது.

மூன்று ரஷ்ய மிக்-31 ரக போர் வானூர்திகள், எஸ்டோனிய வான் பரப்பில் அனுமதியின்றி நுழைந்து மொத்தம் 12 நிமிடங்கள் அங்கேயே பறப்பை மேற்கொண்டதாக, எஸ்டோனிய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், தமது இராணுவக் கூட்டணி உடனடியாக பதிலளித்து ரஷ்ய வானூர்தியை இடைமறித்ததாக நேட்டோ பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்