குறைந்த ரத்த அழுத்தம் கொண்ட நபரா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த பதிவு!

பொதுவாக மக்கள் ரத்த அழுத்த நோயை பெரிதாக கணக்கெடுப்பதில்லை. ஆனோல் குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தானவை.

இவற்றை நாம் புறக்கணித்தால் எதிபாராத நேரத்தில் நமக்கு பல பிரச்சனை வரும். குறைந்த இரத்த அழுத்தம் என்பது இரத்தத்தில் ஓடும் அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவை விடக் குறைவாக இருக்கும்போது ஏற்படும் நிலை.

இந்த நோயின் முதல் அறிகுறிகளாக தலைச்சுற்றல், மயக்கம், மங்கலான பார்வை, குமட்டல் போன்றவை ஏற்படலாம்.

இதற்கான காரணங்கள், நீரிழப்பு, சில மருந்துகளின் பக்க விளைவுகள், இதயப் பிரச்சனைகள், சில ஊட்டச்சத்துக் குறைபாடுகள் என பல வகைப்படலாம்.

ஆனால் குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை உடையவர்களுக்கு ஒரு அருமையான தீர்வு உள்ளது அது என்னவென்பதை பார்க்கலாம்.

உடலில் உங்களுக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் பலவீனம், தலைச்சுற்றல், கைகள் மற்றும் கால்கள் நடுங்குதல், வேகமான இதயத் துடிப்பு, சோர்வு அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் அடிக்கடி வரும்.

இதற்கு காரணம் ரத்தம் உடலின் பாகங்களுக்கு குறைவான அளவில் வினியோகம் செய்வது தான். இதுபோன்ற சூழ்நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு கட்டாயம் ஒரு மருத்துவரை அணுகுவது அவசியம்.