நிலாவுக்கு தெரிய வந்த உண்மை சிக்கிய சோழன் வெளியாகிய பரபரப்பான புரொமோ

அய்யனார் துணை, தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் படு பேவரெட் தொடராக அமைந்துள்ளது.

இப்போது கதையில் பாண்டி-வானதி காதல் பிரச்சனை நடந்து முடிந்தது. அடுத்து நிலா-சோழன் விவாகரத்து பிரச்சனை தொடங்கிவிட்டது.

சோழன் எப்படியாவது தனது காதலை சொல்லி நிலாவுடன் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறார், ஆனால் அது இப்போது வரை நடக்கவில்லை.

இந்த வார எபிசோடில், நிலாவின் பிறந்தநாளை சோழன் கேக் வெட்டி, புடவை எடுத்து கொடுத்து கொண்டாடுகிறார்.
அதாவது நிலா தனது ஆதார் எண் இல்லாமல் எப்படி திருமணம் நடந்தது என போலீஸ் அதிகாரியிடம் கேட்க அவர் உன் கணவர் வைத்திருந்தார் கொடுத்தார் என்கிறார். இதனால் நிலா செம ஷாக்கான நிலா சோழனை கடற்கரை அழைத்து சென்று பேசுகிறார்.

அங்கு தனக்கு தெரிந்த உண்மையை கூறி சண்டை போட்டு இந்த பொய் கல்யாணத்தை நிஜ திருமணமாக மாற்ற யோசிக்காத என கோபமாக கூறிவிட்டு செல்கிறார்.