எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி ஒரு வழியாக ஜீவானந்தம் மற்றும் பார்கவி இருக்கும் இடத்திற்கு சென்று விட்டார்.
எதிர்நீச்சல்
கெட்டவர்கள் நன்றாக வாழும் சீரியல் தான் இந்த எதிர்நீச்சல். கதைக்களத்தில் குணசேகரனுக்கு சாதகமாக தான் எல்லா விடயங்களும் அமையும்.
தற்போதைய எபிசோட்டில் தர்ஷனுக்கு கல்யாணம் செய்து வைக்க குணசேகரன்மற்றும் அன்புக்கரசி திட்டம் போட்டு கொண்டு இருக்கிறார். இதற்கு உடந்தையாக அவர் தம்பிகள் இருக்கின்றனர்.
இன்னுமொரு பக்கம் ஜீவானந்தம் பொலிஸால் சுடப்பட்டு பார்கவியுடன் காட்டில் மாட்டிக்கொண்டு உள்ளார். இவர்கள் இருவரையும் காப்பாற்ற ஜனனி தனியாக சென்றிருக்கிறார்.
பொலிஸார் ஜீவானந்தம் மற்றும் பார்கவியை சுட்டு விட்டதாக தகவல் தெரிவித்து இருந்தனர். ஆனால் குண்டு அடி பட்டது ஜீவானந்தத்திற்கு மட்டும் தான்.
பார்கவி உயிருடன் தான் இருக்கிறார். ஜனனி ஜீவானந்தம் மற்றும் பார்கவியை தேடி காரில் தனியாக செல்று ஒரு வழியாக அவர்கள் இருக்கும் இடத்தையும் அடைகிறார்.
இன்னுமொரு பக்கம் மண்டபத்தினுள் பருதா வேடம் போட்டு தர்ஷனிடம் பேசுவதற்காக நந்தினி உள்ளே வந்துள்ளார். இப்படி மருமகள்கள் தர்ஷனை அந்த திருமணத்தில் இருந்து காப்பாற்ற பல வழிகளில் முயற்ச்சி செய்கின்றனர்.
இதனுடன் ப்ரமொ காட்சி முடிகிறது. இதனிடையில் மருமகள்கள் குணசேகரனிடம் மாட்டுவார்களா இல்லையா என்பதை எபிசோட்டில் தெரிந்து கொள்ளலாம்.







