இலங்கையில் இணையதளங்கள் ஊடாக பாலியல் தொழில் தளங்களின் விரைவான வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினர் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.
சுற்றுலா விசாக்களில் வரும் பல சுற்றுலாப் பயணிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைத்தளங்கள் மற்றும் கையடக்க தொலைபேசி பயன்பாடுகள் தினமும் நூற்றுக்கணக்கான விளம்பரங்களை வெளிப்படையாகக் காண்பிக்கின்றன.
இந்த தளங்கள் பாலியல் வர்த்தகத்தை மேலும் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய பாலியல் விடுதிகள் அல்லது உடல் பிடிப்பு நிலையங்கள் போலல்லாமல், இணையச் சேவை வழங்குநர்கள், டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுடன் இணைவதும் இதன் போது கண்டறியப்பட்டுள்ளது.







