லொறி மோதியதில் பலியான வயோதிபர் !

களுத்துறையில் லொறி மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து களுத்துறை, புலத்சிங்கள, பாருதல்வில பகுதியில் இடம்பெற்றுள்ளது.

லொறி ஒன்று வீதியில் பயணித்த நபர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று புலத்சிங்கள பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் புலத்சிங்கள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய வயோதிபரே உயிரிழந்தவர் ஆவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.