கடந்த 24 மணித்தியாலங்களில் 666 பேர் கைது!

காவல்துறை பொது பரிசோதகரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 666 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில், குற்றங்கள் தொடர்பாக நேரடியாக அடையாளம் காணப்பட்ட 16 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 218 பேர், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 156 பேர் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 49 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, பொறுப்பற்ற வகையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 22 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.