குளவிக் கொட்டுக்கு இல்லக்கான கணவன் மரணம் மனைவி வைத்தியசாலையில்!

குளவி கொட்டுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நவ குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி – நாவலப்பிட்டி, நவ குருந்துவத்த, தொலபோவல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்ருள்ளது.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (11) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் தொலபோவல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய கணவன் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.