அதீத வேகத்தால் பறிபோன உயிர்!

காலி – உடுகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (09) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சிறுவன் படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.