சிறியதாக இருந்தாலும் சியா விதைகளில் நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன.
நீங்கள் அடிக்கடி சாப்பிடும் ஓட்ஸ், ஸ்மூத்திகள் அல்லது புட்டிங் போன்ற உணவுகளில் தூவி சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால் இந்த சியா விதைகளை முறையாக சாப்பிட்டால் மட்டுமே அது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். உங்கள் உணவில் சியா விதைகளைச் சேர்க்க விரும்பினால், அவற்றின் பக்கவிளைவுகளை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
எனவே இந்த சியா விதைகளை எப்படி சாப்பிட்டால் ஆரோக்கியம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
சியா விதைகள்
ஏன் ஆபத்தானது
சியா விதைகளை உலர்த்தி, நேராக உட்கொள்வது ஆபத்தானது. இந்த விதைகள் அவற்றின் எடையை விட 10-27 மடங்கு திரவத்தை உறிஞ்சும்.
இதனால் நீங்கள் இந்த விதைகளை சாப்பிடும் போது அவை உங்கள் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறலை ஏற்படுத்தலாம். எனவே தண்ணீரில் அல்லது வேறு திரவத்தில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
சியாவில் நார்ச்சத்து அதிகம். எனவே வேறு உணவுகளுடன் சியா விதை சேர்த்து சாப்பிடும் போது அது அது வயிற்றை உப்புசமாக்கி மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
இது அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே நடககும். எனவே ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி சியா விதைகள் போதுமானது. சியா விதைகளை அப்படியே ஊறகை்காமல் சாப்பிடும் போது அது உங்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான நீரை உறிஞ்சி எடுக்கும்.
இந்த விதைகள் ஜீரணமடைவதும் கடினமாக இருக்கும். இதனால் நீஙகள் நீரேற்றம் இல்லாமல் உங்கள் ரத்தம் ஓட்டம் உடல் பல செயற்பாடுகளால் தடைபடும்.
சியாவை மற்ற உயர் நார்ச்சத்துள்ள உணவுகளுடன் (தவிடு, ஓட்ஸ், ஆப்பிள் போன்றவை) அல்லது பைடிக் அமில உணவுகளுடன் (கொட்டைகள் அல்லது பருப்பு வகைகள் போன்றவை) கலப்பது செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு தாது உறிஞ்சுதலையும் குறைக்கும்.
சியா விதைகளில் இருக்கும் ALA எனும் உள்ளடக்கம் இரத்தத்தை மெலிதாக்கும். இது பலருக்கு சிறந்தது, ஆனால் நீங்கள் அவற்றுக்கான மருந்துகளை எடுத்துக்கொண்டால், அது விளைவுகளை அதிகரிக்கக்கூடும்.
சியாவில் ஆக்சலேட்டுகளும் அதிகமாக உள்ளன. இது சிறுநீர் கற்களால் பாதிக்கபட்டவர்கள் சாப்பிட கூடாது.
எனவே சியா விதைகளை மட்டும் சாப்பிடாமல் பழங்கள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக சியாவைப் பயன்படுத்துங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.







