இலங்கை அணி குறித்து இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
2025 செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்தியாவுடன் இணைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணியாக இலங்கை இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டி
இந்த தொடரில் சரித் அசலங்கவின் அணி எந்த சூழ்நிலையிலும் போராடும் திறனைக் கொண்டிருப்பதாக சோப்ரா கூறியுள்ளார்.
எனவே இலங்கை அணி, இறுதிப் போட்டியை அடையும் அளவுக்கு சிறப்பாக விளையாடினால் தாம் ஆச்சரியப்படப்போவதில்லை என்று சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இறுதிப்போட்டி இந்தியா-இலங்கை போட்டியாகவும் இருக்கலாம் என்று சோப்ரா தெரிவித்துள்ளார்.







