நாட்டு மக்களுக்கு பொலிசார் விடுக்கும் எச்சரிக்கை!

வங்கியில் இருந்து வெகுமதிகள் வழங்கப்படுவதாக கூறும் ஒரு மோசடிச் செய்தி சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறான மோசடி செய்திகள் மிகவும் ஆபத்தானவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தியில் உள்ள இணைப்புக்களை அழுத்துவதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.

அத்துடன், அவை கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள மென்பொருட்களையும் மாற்றியமைக்கலாம்.

கணினி அவசரகால பதில் மன்றத்திற்கும் இது தொடர்பாக பல முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகள் மூலம் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்கள் இந்த மோசடி குறித்து அதிக கவனமாக செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.