இன்று சூர்யாவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள்..

தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலம் சூர்யா. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல கலெக்ஷன் செய்தது.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சூர்யா தன் திரைவாழ்க்கையில் இன்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றார்.

சூர்யா வாழ்க்கையில் மிகவும் முக்கிய படமான நேருக்கு நேர் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 28 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இப்படம் மக்கள் மத்தியில் வெற்றி பெற்றாலும் ஒரு பக்கம் இந்த படத்தினால் பெரும் விமர்சனத்தை சூர்யா சந்தித்தார்.

இருப்பினும், தொடர்ந்து நடிப்பது என்று முடிவு செய்து பின் வெற்றி கண்டார். இந்நிலையில், சூர்யா 28 ஆண்டுகளை கடந்த நிலையில், கருப்பு படத்தின் படக்குழுவினர் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதோ,