ஜி.வி.பிரகாஷ் பணம் வாங்காமல் இதை எல்லாம் செய்வார்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் அக்கா மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் ஜி.வி.பிரகாஷ் குமார். வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியவருக்கு முதல் படமே செம ஹிட் கொடுத்தது.

அதற்கு முன் ஜென்டில்மேன் என்ற படத்தில் பாடகராக அறிமுகமானவர் இப்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். தற்போது, பிளாக் மெயில் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. அப்போது தயாரிப்பாளர் பிரகாஷ் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், புதிய படத்திற்கு இசையமைப்பதற்கு ஜி.வி.பிரகாசை அணுகினால் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பார். ஆனால், நடிப்பிற்காக கேட்டால் பணம் வாங்காமல் கூட நடிப்பார்.

அந்த அளவிற்கு அவருக்கு நடிப்பின் மீது பற்று அதிகம், தயாரிப்பாளர்கள் விரும்பும் நடிகர் ஜி.வி.பிரகாஷ்” என்று தெரிவித்துள்ளார்.