கிணற்றை சுத்தம் செய்ய இறங்கியவருக்கு நிகழ்ந்த சோகம்!

இரத்தினபுரியில் கல்தொட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்டெம்யாய பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்தொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (04) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் நண்பர்களுடன் இணைந்து கிணற்று நீரை அகற்றி சுத்தம் செய்யச் சென்றிருந்த போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் கல்தொட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.