நாடளாவிய ரீதியில் கடந்த 5 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 48 ஆயிரத்து 925 கஞ்சா செடிகளுடன் 29 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், கடந்த 5 நாட்களில் ஏனைய போதைப்பொருட்களுடன் 3 ஆயிரத்து 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில், 2 ஆயிரத்து 998 பேர் ஹெரோயின், ஐஸ், ஹாஷ், கஞ்சா, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்லப்பட்டிருந்தது.







