OTT-க்கு வரும் கூலி

கூலி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் கூலி. இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, அமீர் கான், சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

OTT

உலகளவில் இதுவரை ரூ. 515 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ளது. திரையரங்கில் கொண்டாடப்பட்ட கூலி திரைப்படம் எப்போது OTT-க்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது

வருகிற செப்டம்பர் 11ம் தேதி கூலி திரைப்படம் அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதோ அந்த அறிவிப்பு..