அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிர்தௌஸ் பள்ளிவாசல் வீதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளது.
புதிதாக நிர்மாணிக்கப்படும் மூன்று மாடி வீட்டின் மேல் அறை ஒன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த கலந்தர் 54 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







