நீதித்துறையிலும் AI பயன்பாட்டைக் கொண்டுவர தீர்மானம்!

சிறிய குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், நீதித்துறையிலும் AI பயன்பாட்டைக் கொண்டுவர இந்திய ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய நீதிமன்ற நீதிபதிகளுக்கு AI பயிற்சியளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக செயற்பாட்டில் உள்ள பிற நாடுகளுக்கு நீதிபதிகளை அனுப்பி ஆய்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.