83 மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞன் ஒருவன் 6 மாதங்களாக காதலித்து வரும் சம்பவம் தற்போது இணையவாசிகளால் விமர்சிக்கபட்டு வருகின்றது.
காதலுக்கு வயதில்லை
காதல் உன்பதற்கு எதிர்பாலினத்தவரிடம் தோன்றும் ஒரு இயற்கையான உணர்வு. இது பல காரணங்களால் வரும். முற்காலத்தை விட தற்போதைய இளைஞர்கள் காதலித்து ஒருவரை பற்றி முற்றாக அறிந்தவுடன் தான் திருமணத்திற்கு ஒப்புகொள்கின்றனர்.
அப்படி இருக்கையில் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு காதல் கதை வைரலாகி வருகின்றது. அதாவது 83 வயதாகும் ஒரு மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞன் ஒருவன் காதலித்து வருகிறான்.
இவாகள் இருவரும் கடந்த 6 மாதங்களாக இரவிட்டாரின் சம்மதத்துடன் டேட்டிங் செய்து வருகிறார்களாம். இந்த இளைஞன் காதலிக்கும் இந்த பாட்டி தனது கல்லுரி தோழி என கூறியுள்ளார்.
டிஸ்னிலேண்ட் சுற்றுப்பயணத்தின் போது அந்த இளைஞன் அந்த பாட்டியிடம் தன்னுடையை காதலை கூறியுள்ளார். அதற்கு பாட்டியும் ஓகே கூறியிருக்கிறார்.
பின்னர் இருவீட்டிலும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர் தான் என் காதலி என அந்த இளைஞன் கூறியுள்ளார். இது தற்போது பல இணையவாசிகளை ஈர்த்து வைரலாகி வருகின்றது.
இந்த காதல் கதைக்கு பின்னால் இருக்கும் பின்னணி காரணம் எதுவும் தற்போது தெரியவில்லை. அனால் இவர்களின் இந்த காதலை பார்க்கும் பொது காதலுக்கு வயதில்லை என்பது மட்டும் தெரிகிறது.







