ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரிலும் உணரப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.