மர்மான முறையில் மீட்க்கப்பட்ட சடலங்கள்!

பதுளை – பசறை 9ஆம் கட்டை பகுதியின் வீடொன்றில் இருந்து இருவரது உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பசறை மற்றும் கம்பளை பகுதிகளை சேர்ந்த 28 மற்றும் 38 வயதுகளுக்கிடைப்பட்ட இருவரின் உடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதேசவாசிகளால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய, குறித்த இருவரும் நீண்டகாலமாகப் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.

இதன்போது, சம்பவ இடத்திலிருந்து போதைமருந்தை உட்செலுத்தக்கூடிய ஊசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் அதிகளவான போதைப்பொருட்களைப் பாவித்ததன் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.