ஒருவருக்கு ஆளுமை அழகை வெளிக்காட்டுவது அவர்களின் வெள்ளை மற்றும் பளபளப்பான பற்கள் தான். மற்றவர்களை முதலில் ஈர்ப்பது அவர்களின் பற்களே.
ஆனால் மஞ்சள் மற்றும் அழுக்கு படிந்த பற்கள் பல சமயங்களில் நம்மை மற்றவர்கள் முன்னிலையில் சங்கடமாக்க நேரிடும்.
இதற்கு காரணம் குட்கா மற்றும் வெற்றிலை உட்கொள்வது, புகைபிடித்தல், மோசமான வாய் பராமரிப்பு அல்லது தவறான உணவு முறை போன்ற பல காரணங்களாகும்.
கண்ணாடி முன் நின்று உங்கள் பற்களை நன்றாக அவதானித்து பாருங்கள். மஞ்சள் போன்ற கறைகள் படிந்திருக்கும். அவை தவறான உணவு பழக்க்தால் உண்டாகும் பக்டீறியா தான்.
இதனை நீங்கள் எவ்வளவு பற்பசை போட்டு துலக்கினாலும் மஞ்சள் கறைகள் போகாது. இதற்கு ஒரு வழி உள்ளது. அதை பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மஞ்சள் பற்களை வெண்மையாக்க வீட்டு வைத்தியம்
ஒரு சிலர் மஞ்சள் மற்றும் அழுக்குப் படிந்த பற்களை வெண்மையாக்க, கடைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இதை விட இதற்குப் பதிலாக இயற்கையான பொருட்களைக் கொண்டு, வீட்டிலேயே பற்களை வெண்மையாக்கும் வழிமுறைகளை உருவாக்க முடியும்.
இதனால் நமது பணமும் நம்மிடம் சேமிக்கப்படும். பற்களும் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு 3 பல் பூண்டை எடுத்து தோல் உரித்து அதை நன்றாக பேஸ்ட் போல துருவிக்கொள்ள வேண்டும்.
இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு உப்பு கலந்துகொள்ள வேண்டும். பின்னர் இதில் ஒரு உலுமிச்சையை எடுத்து அதன் விதையை நீக்கிவிட்டு பிளிந்து விட வேண்டும்.
இதன் பின்னர் நீங்கள் வழமையாக பயன்படுத்தும் பற்பசையுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பல் துலக்க வேண்டும் இப்படி செய்தால் பற்கள் கறைகள் நீங்கி பிரகாசமாகும். இதை இரண்டு வாரம் தொடர்ந்து செய்து வித்தியாசத்தை உணருங்கள்.







