மூட்டு வலிக்கு தீர்வாகும் முடவாட்டுக்கால் சூப்

மலைப்பகுதிகளில் காணப்படும் முடவாட்டுக்கால் பல நன்மையினை அளிக்கும் நிலையில், தற்போது இதனை எவ்வாறு சூப் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

முடவாட்டுக்கால்
கொல்லிமலை, குற்றாலம், சேர்வராயன் மலை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக கிடைக்கும் கிழங்கு வகை தான் முடவாட்டுக்கால்.

பெரணி வகையை சேர்ந்த இவை ஈரமான நிலங்கள், பாறை பிளவுகள் மற்றும் மரங்களில் படரும் இந்த கிழங்கு ஆட்டின் கால் போன்ற வடிவத்தையும், ரோமத்தையும் கொண்டிருக்கும். இவற்றினை முடவாட்டுக்கால் மற்றும் சைவ ஆட்டுக்கால் என அழைக்கப்படுகின்றது.

தேவையான பொருட்கள்
முடவாட்டுக்கால் – ஒரு கைப்பிடி
சின்னவெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 2 துண்டு
பூண்டு – 4 பல்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு

தாளிக்க
எண்ணெய் – சிறிதளது
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 1
ஏலக்காய் – 1

செய்முறை
முடவாட்டுக்காலை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் வெட்டி வைத்த முடவாட்டுக்கால், வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

தொடர்ந்து அரைத்து வைத்திருக்கும் கிழங்கையும் போட்டு சிறிது வதக்கிவிட்டு, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து, அரை மணி நேரம் தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.

கடைசியாக சிறிதளது உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்பு சூப்பை சல்லடை வைத்து இறுகட்டி பவுலில் மாற்றி மள்ளித்தழை தூவி குடிக்கவும்.

இவை மூட்டுவலி, எலும்பு அடர்த்தி குறைபாடு, முடக்குவாதம் இவற்றிற்கு சிறந்ததாக இருக்கின்றது.