வாகனத்து அடியில் எலுமிச்சை பழம் வைப்பது ஏன் தெரியுமா?

பொதுவாகவே நமது முன்னோர்கள் பின்பற்றி ஒவ்வொரு விடயங்களுக்கு பின்னும் நிச்சயம் ஒரு அறிவியல் காரணம் இருக்கும்.

அவர்கள் எதையும் வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்காக மட்டுமே செய்தது கிடையாது. அந்தவகையில் புதிதாக வாங்கும் வாகனங்களின் டயருக்கு அடியில் எலுமிச்சை பழத்தை வைத்து வண்டியை இயக்குவதை அனைவருமே ஒரு முறையேனும் பார்த்திருப்போம்.

அதற்கு உண்மையில் என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா? அதற்கு பின்னால் உள்ள சாஸ்திரம் மற்றும் அறிவியல் என்ன என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

அறிவியல் காரணம்
முன்னைய காலங்களில் போக்குவரத்துக்காக கால்நடைகளை தான் பயன்படுத்தினார்கள். அதன் போது அவற்றின் கால்களில் கல்லோ அல்லது முற்களோ குத்துப்பட்டால் அந்த காயங்களில் கிருமிகள் பெருகி காயத்தை ஆறவிடாமல் செய்தது.

அதனால் குதிரைகள் மற்றும் மாடுகள் பெரிதும் வலியை அனுபவிக்க நேர்ந்தது. மேலும் குதிரைகள் மற்றும் மாடுகள் சேறு, சகதி ஆகியவற்றில் பயணிக்க வேண்டிய நிலை காணப்பட்டது, இதில் இருக்கும் பக்டீரியாவாலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

மருத்துவ வளர்ச்சியற்ற காலத்திலேயே நமது முன்னோர்கள் எலுமிச்சை ஒரு இயற்கை என்டிபயோட்டிக்காக பயன்படுத்தினார்கள்.

இது காயத்தில் உள்ள கிருமிகளை அழித்து காயத்தை குணப்படுத்தும் என்பதை அறிந்து காயங்களை ஆற்ற பயன்படுத்தினார்கள்.

இந்த காரணத்துக்காகவே வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மாடுகள் மற்றும் குதிரைகளை வாரம் ஒரு முறை எலுமிச்சை பழத்தை மிதிக்க வைத்தார்கள், இதனால் கண்ணுக்கு தெரியாத சிறிய காயங்கள் இருந்தால் கூட அவை எளிதில் குணமடைந்துவிடும்.

வண்டிகளில் பொருத்தப்பட்டள்ள மாடுகள் அல்லது குதிரைகளின் கால்கள் வலுவாக இருந்தால் தான் அவற்றை பயன்படுத்தி வேகமாக பயணம் செய்யலாம். இதற்காவே எலுமிச்சை பழத்தை மிதிக்க வைக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டது.

இதுவே பின்னர் நவீன வானங்கள் வந்த பின்னரும் ரப்பர் டயர்களில் எலுமிச்சை பழத்தை வைத்து ஆரம்பிக்கும் வழக்கமான மாறிவிட்டது. ஆனால் அதில் அறிவியல் ரீதியான எந்த அந்த பயனும் இல்லை.

சாஸ்திரம் கூறுவது என்ன?
வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் எந்தவொரு புதிய பொருளையும் சுற்றி நிறைய எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றல்கள் இருக்கும்.

எனவே, எதிர்மறை அதிர்வுகளைப் போக்க அனைத்து புதிய பொருட்களுக்கும் அருகில் ஒரு எலுமிச்சையை வைத்திருக்க வேண்டும்.

இதனுடன், இந்த நடைமுறையைப் பின்பற்றுவது உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் நிலையை வலுப்படுத்தவும் உதவும்.

நீங்கள் ஒரு புதிய வாகனத்தின் டயருக்கு அடியில் ஒரு எலுமிச்சையை வைக்கும்போது, ​​குறிப்பாக ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, அந்த வாகனத்தையும் அதன் பயணிகளையும் தீய கண்ணின் தீய விளைவுகளிலிருந்து எலுமிச்சை பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.