பொலிஸ் பொறுப்பதிகாரி மீது மோதிய வேன்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஷார சில்வா மீது வேன் ஒன்றுடன் மோதியதில் பொலிஸ் பொறுப்பதிகாரி காயமடைந்துள்ளார்.

வஸ்கடுவ, வாடியமன்கட பகுதியில் நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த களுத்துறை வடக்கு காவல்நிலைய பொறுப்பதிகாரி, களுத்துறையில் உள்ள நாகொட போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய வேன் மற்றும் வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.