விவாகரத்து சர்ச்சைக்கு பின் ஆர்த்தி வெளியிட்ட பதிவு!

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் ஆர்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இணையத்தில் படு வைரலாகின்றது.

இந்நிலையில்,கருப்பு நிற ட்ரெண்டிங் உடையில் அழகிய புகைப்படங்களுடன் வலிமை பற்றி குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை தான் அண்மை காலமாக இணையத்தில் பயங்கர வைரலாக பேசப்பட்டது.

ரவி மோகன் ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ரசிகர்களை இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது அதனை தொடர்ந்து குடும்ப பிரச்சினையை மாறி மாறி அறிக்கை வெளியிட்டு பொது பிரச்சிகையாகவே மாற்றினார்கள்.

மேலும் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக வெளி நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதும் பெரும் பேச்சுப் பொருளாக மாறியது.

அறிக்கை வெளியிடக்கூடாது என நீதிமற்றம் உத்தரவு பிறப்பித்தன் பின்னரே இந்த பிரச்சினை ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது.தற்போது இருவரும் அவர்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்த்தி ரவி அழகிய புகைப்படங்களுடன், நான் எப்போதும் போலவே, மன்னிப்பு கேட்காமல், முழு வெளிப்பாட்டிலும் இருக்கிறேன்.

ஏனென்றால் வலிமை என்பது புதியவராக மாறுவது பற்றியது அல்ல, அது நீங்கள் எப்போதும் எப்படிப்பட்டவர் என்பதை உணர்ந்துக்கொள்வது என குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவுக்கு நெட்டிசன்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aarti Ravi (@aarti.ravi)