அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மாலிபு நகரில் 11 வயது சிறுமி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த மலைச்சிங்கம் சிறுமியை தாக்கியது.
இதில் சிறுமி படுகாயம் அடைந்தாள். இதனை தடுக்க முயன்றபோது சிறுமியின் தாயையும் அந்த சிங்கம் துரத்தியது.
பின்னர் வீட்டுக்குள் இருந்து வந்த உறவினர் துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதனால் அந்த சிங்கம் அங்கிருந்து தப்பி ஓடியது.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள் அந்த சிங்கத்தைத் தேடிக் கண்டுபிடித்து கருணைக்கொலை செய்தனர்.







